டிடி ரிட்டர்ன்ஸ் காப்பியா???

by vignesh

ஒரு புதிய தமிழ் படம் வெளியானால், அந்த படம் எங்கிருந்து சுடப்பட்டுள்ளது என்கிற தகவலையும் இணையவாசிகள் அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து விடுகின்றனர்.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சந்தானம் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அந்த படம் 2019ல் வெளியான Ready or Not படத்தின் காப்பி என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் நிலையில், எஸ்கேப் ரூம் படங்களின் பாதிப்புகளுடன் பேய் படத்தை மிக்ஸ் செய்து தான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஹாலிவுட் படத்தின் காப்பி தான் இந்த படம் என நெட்டிசன்கள் கண்டுபிடித்து கலாய்த்துள்ளனர்.

காட்சிக்கு காட்சி அந்த கேம் ஷோ மற்றும் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் அந்த வீட்டில் உள்ள வயதான பாட்டி கோடரியுடன் வருவது, வில் கொண்டு ஒருவர் வேட்டையாடுவது, கேம் விளையாடி உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ரூல்களுடன் கடந்த 2019ல் வெளியான Ready or Not படத்தின் ஈயடிச்சான் காப்பியாகத்தான் இந்த படம் உருவாகி இருக்கிறது என்றும், அதில், ஹாரரை மட்டும் காமெடியை சேர்த்து இருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த் என நெட்டிசன்கள் கண்டுபிடித்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

You may also like

Leave a Comment