குடிக்கு அடிமையாகி உயிரை விட்ட குஷ்புவின் ரீல் அண்ணன்…

by vignesh

சினிமாவில் பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணத்தில் கோடம்பாக்கம் பஸ் ஏறி ஒன்று, இரண்டு படங்களில் நடித்தவுடன் தலைக்கணம் ஏறி வாய்ப்புக்கள் கிடைக்காமல் காணாமல் போனவர்கள் ஏராளம், இவர்கள் ஒரு ரகம் என்றால் திறமைகள் பல இருந்தும் குடிக்கு அடிமையாகி வாழ்க்கையினை தொலைத்தவர்கள் பல பேர் அதில் உதய பிரகாஷ் என்கிற நடிகரும் முக்கியமானவர், இவர் யார் தெரியுமா பிரபு, குஷ்பூ நடித்த சின்னத்தம்பி திரைப்படத்தில் குஷ்புவின் அண்ணன்களில் ஒருவராக நடித்திருந்த உதய பிரகாஷ், அந்த காலத்தில் ரஜினி, கார்த்திக் சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் வில்லனாக நடித்து பீக்கில் இருந்த சமயம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து பணத்தை இழந்தார். மேலும் மதுவிற்கு அடிமையாகி குடிசையில் வாழ்ந்து வந்த உதய பிரகாஷை, மீட்டு நடிகர் சங்கத்தின் சார்பாக அவருக்கு சரத்குமாரின் திவான் படத்தில் மீண்டும் நடிக்க வைத்த போதும், விட முடியாத மது பழக்கத்தினால் மானம் இழந்து இறந்தார்.

You may also like

Leave a Comment