இந்து கடவுளை அவமதித்தாரா நயன்தாரா???

by vignesh

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் ஜெய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது அன்னபூரணி திரைபடம். நயன்தாராவின் 75வது படமான இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது . அன்னபூரணி திரைப்படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் அதில் நடித்த நயன்தாரா உள்ளிட்டோர் மீதும் மும்பை பொலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

அன்னபூரணி திரைப்படத்தில் இந்து கடவுளான ராமரை இழிவுபடுத்துவதாகவும் லொவெஜிகாத்தை  ஊக்குவிப்பதாகவும் பல குற்றச்சாட்டுகளை ரமேஷ் சோலங்கி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அன்னபூரணி திரைப்பட இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா , தயாரிப்பாளர் , நடிகை நயன்தாரா மீது பொலிஸார் வழக்கு முன்னெடுத்துள்ளனர் .

இப் புகார் தொடர்பாக அன்னபூரணி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என கூறப்படுகின்றது .

You may also like

Leave a Comment