தனுஷ் நாக்கு பூச்சியா? கிண்டலடித்த சரத்குமார்…

by vignesh

தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு பிரிவில் நின்றது. இருவரும் பிரிந்தாலும் இதுவரை இரண்டு பேரும் விவாகரத்து பெறவில்லை.

இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில், “தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

அவர்களது திருமணம் நடந்த சமயத்தில் ஐயா படத்தின் ஷூட்டிங் தென்காசியில் நடந்துகொண்டிருந்தது. அங்கு பத்திரிகையாளர் என்ற முறையில் சென்றிருந்தேன். அப்போது நெப்போலியன் என்னிடம், ‘என்னங்க எல்லா மீடியாக்காரங்களும் போயஸ் கார்டனிலேயே போய் நின்னுட்டீங்களே’ என நொந்துகொண்டார். அதேபோல் சரத்குமார் என்னிடம் பேசுகையில், ‘யாருங்க அவன் (தனுஷ்) ஒல்லியா நாக்கு பூச்சி மாதிரி ஒருத்தன் வந்திருக்கான். அவன் ரஜினி வீட்ல பொண்ணு எடுத்துருக்கான் என்று அவரது ஆதங்கத்தை கொட்டினார்.

தற்போது இந்த விஷயத்தை கையிலெடுத்து சம்பந்தப்பட்ட நடிகரை தனுஷ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment