கவினுக்கு விரைவில் டும்…டும்…

by vignesh

கவின் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான லிஃப்ட் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப்பெற்றுத் தந்தது. அதன்பின்னர் கவின் நடிப்பில் டாடா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது. கல்லூரி மாணவன்,காதலன்,கணவன், அப்பா என ஒரே படத்திலேயே அனைத்து கேரக்டரிலும் நடித்திருந்தார். டாடா படத்தை இளசுகள் முதல் பெரிசுகள் வரை ரசித்து ரசித்துப் பார்த்தனர்.

இந்த நிலையில் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் பெரியவர்கள் பார்த்த பெண்ணை கவினுக்கு பிடித்துவிட்டதால், அவர் ஒகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் 20ஆம் தேதி கவினுக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவின் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் பரவி வரும் செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

You may also like

Leave a Comment