Bigg Boss-7… எப்போ தெரியுமா..???

by vignesh

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. தற்போது இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. சமீபத்தில் இந்த சீசனுக்காக கமல் நடித்த பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தது.

அதுமட்டுமல்லாது இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கப் போவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டியுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கதாநாயகி’ ஷோ ஆனது இன்னும் 3வாரங்களில் முடிவிற்கு வரவுள்ளது. இதனையடுத்து செப்டெம்பர் 24ஆம் தேதி அல்லது அக்டோபர் 7-ஆம் தேதி பிக்பாஸ் லான்ஞ் இடம்பெறும் எனவும் தற்போது ஒரு தகவல் உறுதியாகி இருக்கின்றது.

You may also like

Leave a Comment