ஹீரோயினாக என்ட்ரியாகும் பொன்னியின் செல்வன் பட நடிகை… இயக்குநர் யார் தெரியுமா?

by vignesh

தமிழ் சினிமா எத்தனையோ குழந்தை நட்சத்திரங்களை பார்த்து இருந்தாலும், அவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வரிசையில் அப்போது பேபி சாராவும் இணைந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக க்யூட்டான குழந்தையாக நடித்திருந்தார் சாரா. அப்பா மகள் பாசத்தை சொல்லும் இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சாரா நடித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த சிறுவயதிலேயே தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பல்வேறு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் சாரா.

தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு தமிழில் சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, ஹலிதா சமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி போன்ற படத்தில் பேபி சாரா நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளம், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரன் சிறுவயது நந்தினியாக நடித்து அசத்தி இருந்தார்.

இந்நிலையில், இத்தனை நாட்களாக பேபி சாராவா இருந்து வந்த சாரா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இது குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் சாராவை தெய்வீக அழகை காண்பித்துவிட்டார். இனி சாரா ஹீரோயினாக நடிக்கலாம். அவரை 2025 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகப்படுத்த இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

You may also like

Leave a Comment