பொங்கலுக்கு நேரடியாக மோதும் கேப்டன் மில்லர்-அயலான்

by vignesh

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் 5 ஆண்டுகள் இடைவேளைக்குப் பின்னர் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. 2018ல் தொடங்கப்பட்ட அயலான் பல தடைகள் காரணமாக ட்ராப் ஆகும் நிலைக்குச் சென்றது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அயலான் படத்தை விட்டுவிடாமல் சிவகார்த்திகேயனும் ரவிக்குமாரும் பார்த்துக்கொண்டனர். அதற்கு பலனாக அயலான் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது.

பொங்கல் ரேஸில் களமிறங்கும் அயலானுக்குப் போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர் படமும் ரிலீஸாகிறது. இதனால் தனுஷ் – சிவகார்த்திகேயன் இடையேயான போட்டியாக இது பார்க்கப்படுகிறது. அயலான் ட்ரெய்லரை தொடர்ந்து கேப்டன் மில்லர் ட்ரெய்லரும் மறு நாளே வெளியானது. ஆனால், கேப்டன் மில்லருக்கு சென்சாரில் UA சர்டிபிகேட் கிடைத்துள்ளது. அதேநேரம் அயலான் படத்துக்கு U சான்றிதழ் கிடைத்துள்ளதால் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment