விஜயகாந்துக்கு அயலான் படக்குழு மரியாதை

by vignesh

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் அயலான் முதல் காட்சி என்றாலும், மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இப்போது அயலான் படத்தின் டைட்டில் கார்டிலும் விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். என்றென்றும் நினைவில் கேஜேஆர் & ஃபேமிலி, சிவகார்த்திகேயன் & ஃபேமிலி, அயலான் டீம் என டைட்டில் கார்டில் விஜயகாந்த் போட்டோவுடன் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இது விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி சிவகார்த்திகேயன் ரசிகர்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment