தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயனின் அயலான்???

by vignesh

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் தீபாவளி ரேஸில் இருந்து ‘அயலான்’ படம் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் படக்குழு இதுவரை இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

You may also like

Leave a Comment