சிவகார்த்திகேயன் காட்டில் வசூல் மழை…

by vignesh

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. ஏலியனை வைத்து முதன்முறையாக படம் வெளியாகியிருப்பதால் சிறுவர், சிறுமிகள் மற்றும் குடும்பத்தினரிடம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி உலகம் முழுவதும் படமானது 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான மாவீரன் திரைப்படமும் 50 கோடி ரூபாயை தாண்டியது. தற்போது அயலானும் அந்த வசூலை தாண்டியிருப்பதால் தொடர்ச்சியாக எஸ்கேவுக்கு இரண்டு சூப்பர் ஹிட்டுகள் கிடைத்துவிட்டன என்று எஸ்கே ரசிகர்கள் கூறுகின்றார்கள்.

You may also like

Leave a Comment