சர்வதேச அளவில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். அந்தவகையில் நீண்ட காலங்களுக்கு பிறகு இவரது இசை நிகழ்ச்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரியில் இருக்கை ஒதுக்காததனால் ரசிகர்களுக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து திடீரென தடுப்புகளை உடைத்து ரசிகர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
அங்கிருந்த Bodyguards அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறியுள்ளனர். அதுமட்டுமல்லாது ஒரு சிலர் அங்கிருந்த சேர்களை தூக்கி எறிந்தும், Bodyguards ஐ தள்ளியும் உள்ளனர். இவ்வாறாக ரசிகர்களின் ரகளை ஆனது ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.