ஆண்ட்ரியாவுடன் காதல் பற்றி அனிருத் ஓபன் டாக்

by vignesh

அனிருத்  ஆண்ட்ரியாவுடன் இருந்த காதல் குறித்து அனிருத் ஓபனாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ஹிட்டடித்தாலும் குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுக்க பரவியது.

அனிருத் எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையையும் சந்தித்தவர். முக்கியமாக அவருடைய 19ஆவது வயதிலேயே தன்னுடைய 6 வயது மூத்தவரான ஆண்ட்ரியாவை காதலித்தார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் அந்த காதல் குறித்தும் எதற்காக பிரேக் அப் ஆனது என்பது குறித்து பேசியிருக்கிறார்.அந்த வீடியோவில், “நான் இப்போது எந்தக் காதலும் செய்யவில்லை. ஆனால் காதல் செய்யலாம் என்ற முடிவில் இருக்கிறேன். அடுத்த முறை என் வயதைவிட குறைவான வயது உள்ள பெண்ணைத்தான் காதலிப்பேன்.

நான் ஏற்கனவே ஆண்ட்ரியாவை காதலித்தேன். அப்போது எனக்கு 19 வயது அவருக்கு 25 வயது. அது உண்மை காதலா என்று கேட்டால் அது எனக்கு தெரியாது. அதை பெரிதாக நான் பரிசோதனையும் செய்யவில்லை. எங்கள் காதல் பிரேக் அப் ஆனதுக்கு வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. அது எங்களுக்குள் செட் ஆகவில்லை” என்றார்.

You may also like

Leave a Comment