தனுஷ் படத்தில் நடிக்கும் அஜீத்தின் மகள்…

by vignesh

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தில் தனுஷின் சகோதரராக சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழில் ‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

 

You may also like

Leave a Comment