லியோ பற்றி சாண்டி மாஸ்டர் கொடுத்த அப்டேட்…

by vignesh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். மேலும் வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “என்னை இதுவரை ரசிகர்கள் ஜாலியாகத்தான் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் லியோவில் லோகேஷ் கனகராஜ் மொத்தமாகவே என்னை மாற்றிவிட்டார். அவர் அட்டகாசமான க்ரியேட்டர். லியோவில் என்னை வித்தியாசமாக காண்பித்திருக்கிறார். படத்தில் விஜய்யுடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகளும் இருக்கின்றன” என்றார்.

You may also like

Leave a Comment