சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்..?

by vignesh

கோலிவுட்டின் பிரம்மாண்டமான இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் வில்லேஜ் கெட்டப்பில் கலக்கிய அதிதி, அடுத்து மாவீரனில் சிவகார்த்தியனுடன் நடித்திருந்தார். கிளாமர் பக்கம் செல்லாமல் குடும்ப குத்து விளக்காக வலம் வரும் அதிதிக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

சூர்யா 43 படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் ஏற்கனவே கமிட்டாகிவிட்டனர். சூர்யா, துல்கர் சல்மான் இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிப்பதாகவும், 1960களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியாகவும் வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா. இந்நிலையில், சூர்யா 43 படத்தில் அதிதி ஷங்கரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அதிதி ஷங்கர் தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. நஸ்ரியா சூர்யாவுடன் நடித்தாலும் அதிதி தான் ஜோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவுக்கும் ஜோடியாகிறார் அதிதி. சூர்யா 43, வாடிவாசல் படங்களைத் தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment