எட் வெஸ்ட்விக்குடன் காதல் உறுதி செய்த எமி ஜாக்சன்!

by vignesh

நடிகை எமி ஜாக்சன், மதராசப்பட்டிணம் என்ற படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், உதயநிதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ள எமி ஜாக்சன், இந்தியிலும் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் 2.O படத்தை தொடர்ந்து இவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் பொங்கலையொட்டி கடந்த 12ம் தேதி அருண் விஜய்யுடன் எமி ஜாக்சன் நடித்து மிஷன் சாப்டர் 1 படம் வெளியானது.

டந்த 2019ம் ஆண்டில் ஜார்ஜ் பனாயிடோ என்பவருடன் எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அதே ஆண்டில் ஆண் குழந்தைக்கு தாயானார். இவர்களின் திருமணம் நடக்கவிருந்த நிலையில் முன்னதாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் எட் ஸ்விட்சர்லாந்தின் பனிபடர்ந்த சூழலில் எமியிடம் தன்னுடைய காதலை ப்ரபோஸ் செய்துள்ளார். தொடர்ந்து அவரது காதலை உறுதி செய்த எமி, அவர் கொடுத்த நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்துக் கொண்டார். இதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார். 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது வாழ்த்துக்களை கமெண்ட்ஸ் மூலமும் லைக்ஸ் மூலம் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment