ஜெயம்ரவியின் சைரன் எப்போது???

by vignesh

நடிகர் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சைரன். வரும் பிப்ரவரி 16ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாடலில் ஜெயம்ரவி மற்றும் அனுபமாவின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. முன்னதாக படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மிக அதிகமான விலைக்கு கைமாறியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதன் அறிவிப்பு வீடியோவை படத்தின் சூட்டிங் ஸ்பாட் காட்சிகளுடன் ஜெயம்ரவி உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment