தேசிய விருதுகளில் தமிழ் படங்கள் புறக்கணிப்பா???

by vignesh

சற்றுமுன்பு 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் RRR, புஷ்பா உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு அதிகம் விருதுகள் கிடைத்து இருக்கிறது. மேலும் தமிழில் எந்த ஒரு படத்திற்கும் விருது கிடைக்கவில்லை.

இந்த விருதுகள் 2021ல் வெளிவந்த படங்களுக்கானது மட்டுமே, அடுத்து 2022ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிப்பும் கூடிய விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021ல் தமிழில் வந்த பல முக்கிய படங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக தற்போது தமிழ் ரசிகர்கள் ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம், கர்ணன் உள்ளிட்ட பல படங்கள் கண்டுகொள்ளப்படவில்லை என ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment