விஜய் 69-ஐ இயக்கப்போகும் வெற்றி மாறன்???

by vignesh

விஜய் அரசியலுக்கு வருவதை அவரின் ரசிகர்கள் வரவேற்றாலும் அவர் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டார், விஜய் இப்போது நடித்து வரும் கோட் திரைப்படம் அவரின் 68வது திரைப்படமாகும். எனவே, அடுத்து அவர் நடிக்கவுள்ள அவரின் 69வது படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஒருபக்கம் பல இயக்குனர்களின் பெயர் இதில் அடிபட்டு வருகிறது.

முதலில், கார்த்திக் சுப்ராஜின் பெயர் அடிபட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாகவும் சொல்லப்பட்டது. அதன்பின் வெற்றிமாறனின் பெயர் அடிபட்டது. இதை உறுதி படுத்த முடியாமல் இருவரும் மௌனம் காத்து வந்தனர். மேலும் விஜய் கோட் படத்தில் பிசியாகவும், வெற்றிமாறன் விடுதலை-2 எடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெற்றி மாறன் பெயர் கொண்ட X தளத்தில் வெற்றிமாறன் கூறுவது போன்று நான் தான் விஜயின் 69வது படத்தை இயக்கப்போவதாகவும், மேலும் இப்படம் மே மாதத்தில் வெளியாகும் என போஸ்ட் போடப் பட்டுள்ளது,  இதைப் பார்த்த பலரும் இது போலியான அக்கவுன்ட் என கமென்ட் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment