வசூலில் மாஸ் காட்டும் மாமன்னன்

by vignesh

உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

பின் தொடர்ந்து காமெடி ப்ளஸ் ரொமான்ஸ் படத்தில் நடித்துவந்த அவர் பின் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலில் ஈடுபட்டு இப்போது அமைச்சராக வலம் வருகிறார்.

இதனால் தான் நடிப்பை நிறுத்திவிட்டதாகவும், மாமன்னன் திரைப்படம் தனது கடைசி படம் என கூறியிருந்த நிலையில் கடந்த ஜுன் 29ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. முதல் நாளிலேயே ரூ. 10 கோடி வசூலித்த இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment