மாவீரன் ட்ரைலர்- விமர்சனம்

by vignesh

மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்கிய தமிழ் அதிரடித் திரைப்படமாகும் எனவே மடோன் அஷ்வின் சிவகார்த்திகேயன் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. அதிதி ஷங்கர் மற்றும் மிஷ்கின் இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ளார். படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார், வித்து அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

டிரைலர் தொடக்கத்திலேயே சிவகார்த்திகேயனை கைது செய்வது போலவும் ஹீரோ ஏதோ பத்திரிகை துறையில் கார்டூனிஸ்ட்டாக வேலைசெய்வது போலவும் காட்சி அமைத்துள்ளது.மிஸ்கீனை பார்த்தால் அவர்தான் படத்தின் வில்லன் போல தோற்றம் அளிக்கிறார்.

படத்தின் கதை என்று பார்த்தால் ஒரு அரசியல்வாதிக்கும் சாமானியனுக்கு நடக்கின்ற கதை போலத்தான் தெரிகிறது படத்தில் கூடுதலாக யோகிபாபு காமெடியில் பட்டைய கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது மொத்தத்தில் மாவீரன் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் ஆக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

 

 

You may also like

Leave a Comment