பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர் நடிகை ஷகிலாவின் மகளா????

by vignesh

விஜய் டிவியில் இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று பல்வேறு தகவல்கள் இணையத்தில் வலம் வருகிறது.

விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட இருக்கிறது. இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. அதே வகையில் ஒரு சிலருடைய பெயர்கள் அதில் அதிகமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றதுய அந்த வகையில் மாகாபா ஆனந்த் உட்பட சில விஜய் டிவி பிரபலங்கள் இந்த வரிசையில் இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்கள் வரிசையில் இந்த முறை யார் கலந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பும் இருக்கின்றது. அதற்கு அதிகமான கருத்துக்கள் நடிகை ஷகிலாவின் மகளான மிலா தான் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே மிலா கடந்த இரண்டு சீசன்களுக்கு முன்பு கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சீசனில் நமிதா மாரிமுத்து கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த சீசனில் சிவின் கணேசன் கலந்து கொண்டார். அதிலும் நமீதா மாரிமுத்து சில தினங்களில் சில பிரச்சனைகளால் வெளியேறி இருந்தாலும் சிவின் கடைசி நாள் வரைக்கும் இருந்து அதிகமான ரசிகர்களுடைய அன்பையும் பெற்றிருந்தார்.

You may also like

Leave a Comment