சலார் டீசர் எப்போது வெளியாகிறது???

by vignesh

தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பான் இந்திய ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ்.பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க தொடங்கிய நடிகர் பிரபாஸ் அவர் நடித்து வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை பெற்றது.

அதை தொடர்ந்து பிரம்மாண்ட தயாரிப்பில் இராமாயணத்தை தழுவி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய அளவு உருவான ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமானாக நடித்தார் பிரபாஸ். இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில்  ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவான இப்படம் கடந்த ஜூன் மாதம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் வெளியானது.

ஆதிபுருஷ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் அளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இருந்து படத்தின் பட்ஜெட்டை தொடுவதில் சிக்கலில் உள்ளது. பாகுபலியை காட்டிலும் சுமாரான வரவேற்பையே ஆதிபுருஷ் திரைப்படம் பெற்றது.

இதனிடையே நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் ‘சலார்’. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் கேஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க மேலும் மலையாள நடிகர் பிரித்வி ராஜ் மிரட்டலான வில்லனாக நடிக்கிறார்.

சலார் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டே வரும்  சலார் படத்தின் டீசர் வெளியீட்டு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்காக வெளியிடுட்டுள்ள சிறப்பு போஸ்டரின் படி, பிரம்மாண்ட சலார் பட டீசர் வரும் ஜூலை 6ம் தேதி காலை 5.12ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மிகபெரிய அளவு வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment