கரகாட்டம் கற்ற முண்டாசுப்பட்டி நடிகர்.

by vignesh

சக்தி சினி புரொடக்‌ஷன் சார்பில் டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரித்துள்ள படம், ‘காடப்புறா கலைகுழு’. ராஜா குருசாமி இயக்கி இருக்கிறார். முனீஷ்காந்த், காளி வெங்கட், ஸ்வேதா ரமேஷ், லேகா ராஜேந்திரன் நடித்துள்ளனர். ஹென்றி இசை அமைத்துள்ளார். வரும் 7ம் தேதி படம் திரைக்கு வருகிறது. முனீஷ்காந்த் கரகாட்டக் கலைஞனாக நடித்துள்ளார். இதற்காக கரகாட்டக் குழுவினரிடம் முறைப்படி அவர் கரகாட்டம் ஆட கற்றுக்கொண்டார். நையாண்டி மேளக் கலைஞனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

You may also like

Leave a Comment