அம்மாவானாரா பிரபல சீரியல் நடிகை?

by vignesh

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை பக்கம் வந்த இவர் சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

அதன்பிறகு நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து சீரியல்கள் நடித்துவந்த ரச்சிதா விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸிலும் கலந்துகொண்டார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் எனது வாழ்க்கையில் இனி எனது அம்மா மற்றும் நான் தத்தெடுக்கப்போகும் குழந்தை மட்டும் தான் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் அவர் ஒரு கியூட் குழந்தையுடன் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் தத்தெடுக்க இருப்பதாக கூறியிருந்தாரே என வீடியோவை பார்த்துள்ளனர்.

ஆனால் அந்த குழந்தைக்கு ரச்சிதா அத்தையாம், தனது உறவினர் குழந்தையுடன் எடுத்த வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

You may also like

Leave a Comment