முனிஷ் ராஜாவை பிரிந்த ராஜ்கிரண் வளர்ப்பு மகள்!

by vignesh

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ்ராஜா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் சம்மந்தம் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். அதற்கு பிறகு இவர் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், பெரிய அளவில் இவருக்கு சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை அடுத்து கடந்த சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராக போட்டியிட்டு முனீஸ்ராஜா தோல்வி அடைந்திருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும், முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு முனீஸ் ராஜா மற்றும் பிரியா வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதினால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா வெளியிட்டுள்ள வீடியோவில் நானும் முனீஸ் ராஜாவும் பிரிந்து விட்டோம் என்று கூறியுள்ளார். அதில், நானும் நடிகர் முனுஷ் ராஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை. இப்போது நான் கணவருடன் இல்லை, இருவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கிறோம். இந்த திருமணத்தால் என்னை வளர்த்த அப்பாவை நான் ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன். ஒன்னு இல்ல ரெண்டு இல்ல நிறைய கஷ்டப்படுத்திவிட்டேன். அப்படி இருந்தும் எனக்கு கஷ்டம் என்றதும் எனக்காக என் அப்பா வந்தார். இதற்காக எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது, என்னை மன்னிச்சிடுங்க என்று பிரியா கண்ணீர் மல்க பேசி உள்ளார்.

You may also like

Leave a Comment