நடிகர்களை தூக்கி விடுறதே ரசிகர்கள் தான்: உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

by vignesh

முறைமாமன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி.

உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

2006ம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர், தலைநகரம் படம் கொடுத்த நம்பிக்கையால் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தலைநகரம் படத்தில் நடித்தது குறித்த அனுபவம் குறித்து சுந்தர் சி மனம் திறந்துள்ளார்.

இயக்குநர் சுராஜ் போனில் அழைத்து படம் சூப்பர் ஹிட் எனக் கூறினார். அதனைக் கேட்ட சுந்தர் சி-யால் தலைநகரம் ஹிட்டானதை நம்பவே முடியவில்லையாம். அதன்பிறகு சென்னை திரும்பிய சுந்தர் சி-யை உதயம் தியேட்டர் அழைத்துச் சென்றுள்ளார் சுராஜ்.

அங்கே சுந்தர் சி-க்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து கண்கலங்கிவிட்டதாகக் கூறியுள்ளார். பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் படம் பார்த்ததைப் பார்த்து ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்ததையும் சுந்தர் சி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒண்ணும் இல்லாத நடிகர்களை ஒரே இரவில் தூக்கி விடுவதே ரசிகர்கள் தான். அவர்கள் இல்லாமல் நானும் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. இது எல்லாமே அவர்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரம் என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment