மிரட்ட காத்திருக்கும் சிம்பு, STR 48 குறித்து வெளியான அப்டேட்…

by vignesh

சிம்புவின் 48வது படத்தின் அபிஸியல் அப்டேட் சில தினங்களுக்கு வெளியாகியிருந்தது. அதன்படி, தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சிம்பு, கமல்ஹாசன், தேசிங் பெரியசாமி என முதன்முறையாக இணையும் இந்த மூவர் கூட்டணிக்கு ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது

STR 48 படம் மூலம் சிம்பு ஆக்‌ஷனில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக தேசிங் பெரியசாமி ரெடி செய்த கதையில் தான் சிம்பு நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் முடியாத நிலையில், STR 48 படப்பிடிப்புத் தொடங்க இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், STR 48 திரைப்படம் 2024 அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment