ஆண்குழந்தைக்கு தாயான சிலம்பாட்டம் பட நடிகை…

by vignesh

நடிகர் சிம்பு நடித்த திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சனா கான் முதல் முறையாக ஆண் குழந்தைக்கு தாயாகியிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

மொழிகளில் 14 திரைப்படங்களையும் 50 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களையும் நடித்திருந்த இவர் கடந்த 2020 இல் முஃப்தி அனாஸ் சையத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்த இவர் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருக்கிறேன் என்று தகவல் வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது ஆண் குழந்தைக்கு தாயாகி இருக்கும் மகிழ்ச்சி தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment