ரசிகர் கேட்ட கேள்வி காட்டமாக பதிலளித்த பிரியா பவானி சங்கர்

by vignesh

கோலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்துவரும் நாயகியாக மாறியுள்ளார் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து கமல்ஹாசன், கார்த்தி, ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, அருண் விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

தொடர்ந்து கமலுடன் இந்தியன் 2, அருள்நிதியுடன் டிமான்டி காலனி போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் விரைவில் ரிலீசாகவுள்ளன. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து பல்வேறு போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், பிரியா பவானி சங்கரின் உள்ளாடை சைஸ் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், 34டி தான் சகோதரரே என்றும் மார்பகங்களை தான் வேற்று கிரகத்தில் இருந்து பெறவில்லை என்றும் பதிலடி கொடுத்தார். மேலும் உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் உண்டு என்றும் ஜூம் செய்து பார்த்தால் அதன் சைஸ் தெரியும் என்றும் அதற்கு வாழ்த்துக்கள் என்று காட்டமாக பதிலளித்திருந்தார்.

You may also like

Leave a Comment