கோமாளி பட இயக்குனருக்கு ஸ்ரீதேவி மகள் ஜோடியா?

by vignesh

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, கடந்த ஆண்டு லவ் டுடே எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தில் ஹீரோவாகவும் அவரே நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்காநாதன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என எதிர்பார்ப்பு இருந்தது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்தது. ஆனால், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் இளம் நடிகையும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இது நடந்தால், இப்படம் தான் ஜான்வி கபூருக்கு முதல் தமிழ் திரைப்படமாக அமையும். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment