ஒருவர் மட்டுமே நடிக்கும் புதிய படம்…

by vignesh

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவரான ஜி.சிவா தற்போது கதையின் நாயகனாக நடித்திருக்கின்றார். இப்படத்தில் அவர் மட்டுமே ஒற்றை ஆளாக நடித்துள்ளார். மேலும் இவர் விருகம் எனும் படத்தை அடுத்து இப்படத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் ஓகி ரெட்டி சிவக்குமார் மற்றும் அருண் சுசில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணிசேகரன் செல்வா இசையமைத்திருக்கின்றார். மேலும் இப்படத்துக்கு ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இயக்குநர் பேசுகையில் “பழிக்கு பழி வாங்கும் கதையாக இருந்தாலும்.. ஒரே ஒரு கதாபாத்திரத்தின் கோணத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்” என்றார்.

இப்படத்தில் ஒருவர் மட்டுமே நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

You may also like

Leave a Comment