முதல் மரியாதை பட நடிகை குறித்து கமல் சொன்னதாக பாரதிராஜா சொன்ன அப்டேட்

by vignesh

பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகி மூன்றாவது படமாக எடுத்தது தான் சிகப்பு ரோஜாக்கள். ஒவ்வொரு படத்திலும் புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து ரிஸ்க் எடுத்த ஒரு மாபெரும் இயக்குநர் பாரதிராஜா அதில் வெற்றியும் கண்டுள்ளார். இந்த நிலையில் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் முதன் முதலில் ஒரு நடிகையாக அறிமுகமானார் வடிவுக்கரசி.

வடிவுக்கரசியை பற்றி கூறும் போது பாரதிராஜா தான் சொல்லாத வசனங்களை கூட ஸ்பாட்டில் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.

ஒரு காட்சியில் வடிவுக்கரசியிடம் சிகரட்டை காட்டி ஆஃபர் பண்ணுவார் கமல். அப்பொழுது வடிவுக்கரசி அதை சாதாரணமாக வாங்கி பிடிக்க போவாராம். ஆனால் அது சீனிலேயே இல்லையாம். அதை தைரியமாக அவராகவே செய்தார் வடிவுக்கரசி என பாரதிராஜா கூறினார்.இதை பார்த்துக் கொண்டிருந்த கமல் பாரதிராஜாவிடம் வடிவுக்கரசியை குறிப்பிட்டு இந்த பொம்பள எல்லாரையும் சாப்பிட்டு போயிருவா. சினிமாவில் ஒரு கலக்கு கலக்க போகிறார் பாருங்கள் என சொன்னாராம். இந்த ஒரு சம்பவத்தை பாரதிராஜா அந்த பேட்டியின் மூலம் கூறினார்.

You may also like

Leave a Comment