நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் மாமன்னன்???

by vignesh

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. உதயநிதியின் கடைசி படம் என்ற அடையாளத்துடன் வெளியான இந்தப் படத்திற்கு முன்னதாக அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் எப்படி நடித்திருப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தது. சில கலவையான விமர்சனங்களை படம் பெற்றிருந்த போதிலும் படம் ஒட்டுமொத்தமாக சிறப்பான விமர்சனங்களையே பெற்றது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனிடையே 9 நாட்களில் படம் 52 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக படத்தின் நாயகன் உதயநிதி அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் அடுத்ததாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 27ம் தேதி முதல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

You may also like

Leave a Comment