முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் கே.வி. ஆனந்த்.
சூர்யா, தமன்னாவை வைத்து அவர் இயக்கிய அயன் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தொடர்ந்து கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் என வித்தியாசமான கதைகளில் பிரம்மாண்ட படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இந்நிலையில், நேற்று சென்னையில் மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் மகள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் நடிகர் சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்கள் செல்லவில்லையா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.