மாமன்னன் வடிவேலுவை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட கமல்ஹாசன்.

by vignesh

விக்ரம் படத்தின் விஸ்வரூப வெற்றிக்குப் பின்னர், செம எனர்ஜியுடன் பல படங்களை வரிசையாக கமிட் செய்தும் இளம் நடிகர்களை வைத்து பல படங்களைதயாரித்தும்வருகிறார்கமல்ஹாசன். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 விரைவில் வெளியாக உள்ள நிலையில், பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்காவின் காமிக் கான் நிகழ்ச்சிக்கே பறந்து சென்றிருக்கிறார்.

ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட காமிக் கான் நிகழ்ச்சியில் இந்திய நடிகர்களான பிரபாஸ், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் ப்ராஜெக்ட் கே படத்திற்காக சென்றுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், க்ளிம்ப்ஸை வெளியிட்டு ரசிகர்களை மிரட்ட இயக்குநர் நாக் அஸ்வின் காத்திருக்கிறார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவை வைத்து அரசியல் படமாக மாமன்னன் படத்தை இயக்கியதை பார்த்து வியந்து போன கமல்ஹாசன், வடிவேலுவுக்குள் இப்படியொரு திறமை இருப்பதை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்து விட்டாராம். இதை இப்படியே ஒரு படத்துடன் நின்று போக விடாமல், அவரை வைத்து இன்னொரு அரசியல் படத்தையும் எடுத்து விடலாம் என்கிற முயற்சியில் கமலே வடிவேலுவுக்காக ஒரு அரசியல் படத்திற்கு கதையை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

You may also like

Leave a Comment