கமலை இயக்கிய அறிவழகன்.. ஸ்வீட் பிறந்தநாள் கிப்ட்!

by vignesh

இந்தியன் 2 படத்தின் சூட்டிங் விரைவில் முடியவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடுக்கிவிடப்பட உள்ளன.

இந்தப் படம் 2024 பொங்கல் ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இதையொட்டியே தற்போது படத்தின் அடுத்தடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை முடித்துவிட்டு கமல், பிரபாசின் ப்ராஜெக்ட் கே படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்த ஹெச் வினோத் இயக்கத்திலும் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்க கமல் கமிட்டாகியுள்ள நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதனிடையே கடந்த வாரத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் தலக்கோணத்தில் நடைபெற்றதாகவும் ஆனால் இந்தக் காட்சிகளை ஷங்கர் படம்பிடிக்காமல்,அந்த காட்சிகளை இயக்குநர் அறிவழகன் படமாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் அறிவழகனின் பிறந்தநாள் பரிசாக ஷங்கர், கமலை இயக்கும் வாய்ப்பை தனது சிஷ்யனுக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment