எம்ஜிஆர் பட இசையின் காப்பியா காவாலா?

by vignesh

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். முதல் இரண்டு படங்கள் போலவே அந்தப் படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்த்திருந்த நெல்சனுக்கு பலத்த அடி விழுந்தது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் நெல்சன் திலீப்குமாரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றினர். இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். எனவே விஜய்யிடம் விட்டதை ரஜினியை வைத்து பிடித்து மீண்டும் தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

இந்தச் சூழலில் படத்தின் முதல் சிங்கிளான காவாலா சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. பாடல் செம வைப் கொடுப்பதாக அனிருத் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் பாடல் குறித்த புதிய சர்ச்சை ஒன்று எழுந்திருக்கிறது. அதன்படி இந்தப் பாடலை அனிருத் காப்பி அடித்திருக்கிறார் என கூறுகின்றனர் ரசிகரக்ள். அதாவது எம்ஜிஆர் நடித்த ஒரு படத்தின் காட்சியில் வரும் பின்னணி இசையும், காவாலா பாடலில் வரும் ஆரம்ப இசையும் ஒரே மாதிரி இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை பகிர்ந்துவருகின்றனர் ரசிகர்கள். இதனை பார்த்த பலர் அட ஆமா அதுபோலவேத்தான் இருக்கு என கூறி வீடியோவை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

You may also like

Leave a Comment