ஜெயிலர் ரன்னிங் டைம்… கொல மாஸ் தான்!

by vignesh

நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.

ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம், சென்சார் சர்டிபிகேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடம் என சொல்லப்படுகிறது. ரஜினியின் ரசிகர்களுக்காகவே ரன்னிங் டைமில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளாராம் நெல்சன். அதேபோல், ஜெயிலர் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைக்கும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருப்பதால், 13 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கும் வகையில் U/A சர்டிபிகேட் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்பில் உள்ள ஜெயிலர் திரைப்படம், ரஜினிக்கும் இயக்குநர் நெல்சனுக்கும் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

You may also like

Leave a Comment