‘ஜெயிலர்’ இசை வெளியிட்டு விழா எப்போது தெரியுமா?

by vignesh
jailer_grand_audiolaunch_date

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மற்றும் நடைபெற உள்ள இடம் குறித்த தகவலை தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’ஜெயிலர்’.

இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூலை 28 ஆம் தேதி… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக புதிய புரோமோவுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இப்படத்தில் நடித்துள்ள மோகன் லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் பாடலாசிரியரை ரஜிடிகாந்த் பாராட்டியிருந்தார்.

 

You may also like

Leave a Comment