தங்கலான் நாயகி மாளவிகா மோஹனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

by vignesh

பிரபல நடிகை மாளவிகா மோகனன் கேரளாவில் பிறந்தவர், இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு மோகனன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் தனது பட்டப் படிப்பை முடித்த மாணவிகள் மோகன் கடந்த 2013ம் ஆண்டு வெளியான துல்கர் சல்மானின் “பட்டம் போலே” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு கன்னடம் ஹிந்தி என்று நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். தமிழில் முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் “பேட்ட” திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் மாளவிகா. அதன்பிறகு தனுஷ் அவர்களின் மாறன், மலையாள திரைப்படமான கிறிஸ்டி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

மேலும் தற்பொழுது ரஞ்சித் அவர்களுடைய இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் வித்தியாசமான முறையில் அவர் நடித்து  முடித்துள்ளார்.இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் அவர் எடுத்த ஒரு போட்டோசூட்டை வெளியிட்டுள்ளார் அதுகுறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

You may also like

Leave a Comment