இசைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கா? ஏ.ஆர்.ரஹ்மானால் காப்பாற்றப்பட்ட உயிர்…

by vignesh

ஏ.ஆர்.ரஹ்மான் தற்கொலைக்கு முயன்ற ஒருவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் காப்பாற்றியிருக்கும் சம்பவம் தெரிய வந்திருக்கிறது.

இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற தன்னை ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்தான் காப்பாற்றியதாக ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருக்கிறார். மலேசியாவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் அடிப்படையில் ஒரு இசை கலைஞர். அவரது தனது ட்விட்டர் பக்கத்தில், “2015ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நள்ளிரவு நான் தற்கொலைக்கு முயற்சித்தேன். அப்போது திடீரென்று என் நண்பரிடம் இருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற நானே வருகிறேன் பாடல் இருந்தது. அதனைக் கேட்டப் பிறகு என் மனம் எப்படி மாறியது என்று தெரியவில்லை. வீட்டிற்குச் சென்று எனது ஹெட்ஃபோன்கள் மூலம் கிட்டத்தட்ட 48 மணிநேரம் திரும்பத் திரும்ப கேட்டு என் அறையை பூட்டிக் கொண்டேன். விட்டுக்கொடுக்காத வாழ்க்கை எவ்வளவு மதிப்புள்ளது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன், உண்மையில் என் உயிரைக் காப்பாற்றியது” என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “எல்லா புகழும் இறைவனுக்கே! வாழ்க வளமுடன்” என தெரிவித்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

You may also like

Leave a Comment