பெரிய விபத்து, கால் செயலிழப்பு இவ்வளவு சோகத்தை அனுபவித்தாரா? அரவிந்த்சாமி

by vignesh

தமிழ் சினிமாவில் 90களில் அறிமுகமாகி சாக்லெட் பாயாக, பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்த நடிகர்.

கடந்த 1991ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி-மம்முட்டி நடித்த தளபதி படத்தின் மூலம் அறிமுகமாகி பின் ரோஜா படம் நடித்தார்.படமும் ஹிட், அதனை தாண்டி ஏ.ஆர்.ரகுமான் இசையில் வந்த அனைத்து பாடல்களுமே சூப்பராக ஹிட்டடித்தது.

2000ம் ஆண்டு அலைபாயுதே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அரவிந்த் சாமி அதன்பிறகு 30வது வயதில் நடிப்பதை நிறுத்தினார்.

இந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு பெரும் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ஒரு கால் செயல்படாமல் இருந்துள்ளது.தொடர்ந்து 4, 5 ஆண்டுகள் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் கம்பேக் கொடுத்தார்.

You may also like

Leave a Comment