மகாராஜாவாக அவாதரம் எடுக்கும் விஜய் சேதுபதி…

by vignesh

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை மிரட்டி வரும் விஜய் சேதுபதி, தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தியில் அவர் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. அதில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்த விஜய் சேதுபதி, தற்போது தமிழில் ஹீரோவாக கம்பேக் கொடுக்கவுள்ளார்.

விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளது. நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும், படத்தின் டைட்டில் ‘மகாராஜா’ எனவும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment