மாவீரன் திரைவிமர்சனம்…

by vignesh

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இப்படி பல பல நட்சத்திரங்களின் மூலம் மாபெரும் எதிர்பார்ப்பை மாவீரன் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது.

படம் எப்படி?

மடோன் அஸ்வின் இப்படத்தில் பூர்வக்குடி மக்களின் பிரச்சினையை பற்றி பேசியுள்ளார். இருப்பினும் அதனை அழுத்தமாக பேசாமல் முதல் பாதியில் காமெடியான திரைக்கதை  அமைக்கப்படிருப்பதால் படம் பார்ப்பவர்களும் ஜாலி  மோடில் குறித்த பிரச்சினையை பார்க்கிறார்கள்.

இவ்வாறாக முதல் பாதி முழுக்க கலகலப்பான காட்சிகளுடன் பயணிக்கும் கதை, இரண்டாம் பாதியில் சீரியஸாக மாறினாலும் கதையில் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் படத்தில் அசசரீயாக ஒலிக்கும் விஜய் சேதுபதியின் குரல் படத்தை இன்னும் இன்னும் சுவாரசியம் ஆக்குகிறது.

அதுமட்டுமல்லாது பரத் சங்கரின் பின்னணி இசை பல இடங்களில் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

You may also like

Leave a Comment