நடிகர் வடிவேலுவின் தம்பி மரணம்

by vignesh

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக இருப்பவர் வடிவேலு.

இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் எமோஷன் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என மாமன்னன் படத்தின் மூலம் காட்டினார். இந்நிலையில், நடிகர் வடிவேலுவுக்கு ஜெகதீஸ்வரன் எனும் ஒரு தம்பி இருக்கிறார்.

இந்நிலையில், வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இவருக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மரணத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

You may also like

Leave a Comment