விஜய்யின் நண்பன் படத்தை இயக்கிய ஷங்கர், தற்போது மீண்டும் அவருடன் இணையவுள்ளார். விஜய் நடிக்கவுள்ள தளபதி 70 படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ‘நண்பன்’ இந்தியில் ஹிட் அடித்த ‘3 இடியட்ஸ்’ ரீமேக்காக தமிழில் உருவாகியிருந்தது.
இதனால் இந்தமுறை விஜய்க்காக ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து வருகிறாராம் ஷங்கர். முதலில் விஜய் ஹீரோவாகவும் விக்ரம் அவருக்கு வில்லனாகவும் நடிக்கும் வகையில் ஒரு கதையை கூறியுள்ளார். ஆனால், இந்த கதையை விஜய் ரிஜக்ட் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதன்பின்னர், ‘முதல்வன் 2’ பட கதையை விஜய்யிடம் கூறியுள்ளார் ஷங்கர். இந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் இறுதியாக இதற்கும் நோ சொல்லிவிட்டாராம். இதனால் அடுத்து சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் கதை ஒன்றை கூறியுள்ளார் ஷங்கர். இந்த கதையை ஹாலிவுட் படம் போல பிரம்மாண்டமாக எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால், விஜய் தரப்பில் இதற்கும் ரெட் சிக்னல் தான் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இன்னொரு கதையை விஜய்க்காக எழுதி வருகிறாராம் ஷங்கர். இது பொலிட்டிக்கல் த்ரில்லர் ஜானரில் செம்ம வெயிட்டான ஸ்க்ரிப்ட் என சொல்லப்படுகிறது. விஜய் விரைவில் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதால், இந்த கதை அதற்கு இன்னும் சப்போர்ட்டாக இருக்கும் என ஷங்கர் அவரது ஐடியாவை கூறியுள்ளார்.
அதனால் விரைவில் விஜய் – ஷங்கர் கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.