விஜய் வர்மாவுடன் விரைவில் தமன்னா திருமண அறிவிப்பு???

by vignesh

நடிகை தமன்னா கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து சுறா, அயன், சிறுத்தை, பையா என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள தமன்னா, தற்போது இந்தியிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து கவனம் பெற்று வருகிறார்.

இவரது கேரியர் பெஸ்ட் படங்களாக பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் சிறப்பாக அமைந்தன. தற்போது ரஜினியுடன் முதல்முறையாக ஜெயிலர் படத்தில் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. சுந்தர் சியுடன் இணைந்து அரண்மனை 4 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன. குறிப்பாக ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. இநதப் படத்தில் இவர் ஆட்டம் போட்டுள்ள காவாலா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது.

அதிகமான வியூஸ்களையும் பெற்று அசத்தி வருகிறது. இதனிடையே அரண்மனை 4 படத்திலும் லீட் கேரக்டரில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. முன்னதாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக கமிட்டாகியிருந்த நிலையில், அவர் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து சுந்தர் சியே படத்தின் நாயகனாக மாறினார். இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட்டிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் தமன்னா, பாலிவுட்டின் பிரபல ஹீரோ விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் பரவின. துவக்கத்தில் இந்த விவகாரத்தில் மௌனம சாதித்த இருவரும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் வர்மாவின் அம்மாவும் இவர்களது திருமணம் குறித்து தொடர்ந்து கேட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

அவரது ஆசையை நிறைவேற்றும்வகையில், விரைவில விஜய் வர்மா மற்றும் தமன்னா திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமன்னாவிற்கு தற்போது 33 வயதாகும் சூழலில் விரைவில் தன்னுடைய திருமணம் குறித்த அறிவிப்பை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து தமிழின் முன்னணி நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா என தங்களது திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக செய்துள்ள நிலையில், தமன்னா தன்னுடைய திருமணத்தை எப்படி நடத்துவார் என்று தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றன.

You may also like

Leave a Comment