கங்குவா படத்துக்காக கோடிகளில் சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர்!!! சூர்யா எடுத்த ரிஸ்க்…

by vignesh

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த க்ளிம்ப்ஸ், படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 மணிக்கு ரிலீஸான கங்குவா க்ளிம்ப்ஸ், 24 மணி நேரத்தில் 2.2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது. சூர்யாவின் லுக், கேரக்டர், பாடி லேங்குவேஜ் என அனைத்தும் படு மிரட்டலாக இருந்தது. இந்தப் படத்தில் சூர்யா 3 கெட்டப்பில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சண்டைக் காட்சிகளில் ஹை ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம்.

அதேபோல், லுக், கெட்டப் போன்றவற்றை மாற்றுவதற்காக சூர்யா பல மணி நேரம் மேக்கப் போட்டு நடித்து வருகிறாராம். தனது சினிமா கேரியரில் கங்குவா படத்திற்காக சூர்யா அதிக ரிஸ்க் எடுத்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. இதுதவிர கங்குவா படத்தில் இன்னும் பல சர்ப்ரைஸ்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கங்குவா படத்திற்காக சூர்யாவுக்கு ரொம்பவே பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதுவரை படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப 30 முதல் 40 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வாங்கி வந்தார் சூர்யா. முதன்முறையாக கங்குவா படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். இதுதான் சூர்யாவின் கேரியரில் அதிக சம்பளம் என சொல்லப்படுகிறது. அதேபோல், கங்குவா படத்தின் பட்ஜெட்டும் 300 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment